ஒரு ரூபாய் சரிந்தால் ரோல்ஸ்ராய்ஸ் கார் விலை ரூ.7 லட்சம் அதிகரிக்கிறதாம்!!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு ரூபாய் சரிந்தால் ரோல்ஸ்ராய்ஸ் கார் விலை ரூ7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய் சரிவு ஏற்பட்டால் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கும் என அந்த நிறுவனத்தின் டீலரின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக கார் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ரூபாய் மதிப்பு சற்று ஏற்றம் பெற்றுள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவு வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியால், அவ்வப்போது கார் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இந்தநிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய் சரிந்தால், ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் விலையை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரிக்க வேண்டியிருப்பதாக அந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளரான கேயுஎன் எக்ஸ்க்ளூசிவ் நிறுவனத்தின் சிஇஓ வெங்கடேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








