கார் கடன் வருமான வரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்திய எஸ்பிஐ
கார் கடன் வாங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் பாரத ஸ்டேட் வங்கி(SBI) கார் கடன் வழங்குவதில் மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதியின் கார்களுக்கு அதிக அளவில் கடன் தரும் வங்கியாகவும் எஸ்பிஐ விளங்குகிறது.

மாருதி விற்பனை செய்யும் 26 சதவீத கார்களுக்கு பாரத ஸ்டேட் வங்கிதான் கடன் வழங்கி வந்தது. இந்த நிலையில், கார் கடன் வாங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
பிற வங்கிகளை காட்டிலும் சிறந்த சேவையையும், பிற வங்கிகளை விட குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெறுவதற்கு வாடிக்கையாளர்களும் முன்னுரிமை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், வாரக் கடன் அளவு அதிகரிக்க துவங்கியதையடுத்து, ஆண்டு வருமான வரம்பை பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியிருப்பதாக தெரிகிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் வாரக் கடன் அளவு ரூ.9,000 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் மொத்த கடனில் 4.99 சதவீதமாக இருந்த வாரக் கடன் தற்போது 5.55 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிற வங்கிகளை நாட வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








