இந்தியாவில் புதிய சொகுசு பேருந்துகளை அறிமுகம் செய்த ஸ்கானியா
இந்தியாவில் சிங்கிள் ஆக்ஸில், டபுள் ஆக்ஸில் மற்றும் டிரிப்பிள் ஆக்ஸில் சொகுசு பேருந்துகளை ஸ்கானியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சுவீடனை சேர்ந்த ஸ்கானியா கனரக வாகன தயாரிப்பு நிறுவனம் ஃபோக்ஸ்வேகனில் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் லார்சன் அண்ட் டர்போ(L&T) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் டிரக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தொலைதூர பயணங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கான புதிய சொகுசு பேருந்துகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மெட்ரோலிங்க் என்ற பிராண்டில் சிங்கிள் ஆக்ஸில், டபுள் ஆக்ஸில் கொண்ட பேருந்துகள் மட்டுமல்லாது டிரிப்பிள் ஆக்ஸில் பேருந்தையும் ஸ்கானியா அறிமுகம் செய்துள்ளது. அதிக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் இடவசதியையும் கொண்டிருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் முழுமையாக கட்டப்பட்ட நிலையில் இந்த சொகுசு பேருந்துகள் விற்பனைக்கு கிடைக்கும். பெங்களூர் அருகே நரசபுரா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஸ்கானியா ஆலையில் இந்த பஸ்கள் கட்டப்பட உள்ளன. வால்வோ, பென்ஸ் பஸ்களுக்கு ஸ்கானியா சொகுசு பஸ்களும் கடும் போட்டியை கொடுக்கும்.

மெட்ரோலிங்க் மாடல்கள்
இதில், சிங்கிள் ஆக்ஸில் கொண்ட பஸ் 45 இருக்கைகள் கொண்டதாகவும், டபுள் ஆக்ஸில் கொண்ட பஸ் 49 இருக்கைகள் கொண்டதாகவும், டிரிபிள் ஆக்ஸில் கொண்ட பஸ் 53 இருக்கைகள் கொண்டதாகவும் இருக்கும்.

குளிர்சாதன வசதி
முற்றிலும் குளிர்சாதனை வசதிகொண்டதாகவும், வசதியாக அமர்ந்து செல்ல வசதி கொண்டதாகவும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

எஞ்சின்
சிங்கிள் ஆக்ஸில் பஸ்சில் 314 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 9.0 லிட்டர் எஞ்சினும், டபுள் ஆக்ஸில் பஸ்சில் 365 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 9.0 லிட்டர் எஞ்சினும், ட்ரிப்பிள் ஆக்ஸில் பஸ்சில் 416 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 8.0 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். அனைத்து பஸ்களும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டவையாக இருக்கும்.

வடிவமைப்பு
சிங்கிள் ஆக்ஸில் பஸ் 12 மீட்டர் நீளத்துடனும், டபுள் ஆக்ஸில் பஸ் 13.7 மீட்டர் நீளத்துடனும், ட்ரிப்பிள் ஆக்ஸில் பஸ் 14.5 மீட்டர் நீளத்துடனும் சிறந்த கட்டமைப்புடன் கட்டப்பட்டு வர இருக்கிறது. பஸ்சின் இன்டிரியர், இருக்கை அமைப்பு, பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து படங்களில் காணலாம்.

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து

ஸ்கானியா சொகுசு பேருந்து



Click it and Unblock the Notifications








