இன்னும் ஒரு படி மேலே செல்லும் சொகுசு பஸ் அம்சங்கள்... ஸ்கானியாவின் 7 ஸ்டார் பஸ்!!
டிசி டிசைன் நிறுவனத்தின் கைவண்ணத்தில் இழைக்கப்பட்ட பிரிமியம் இன்டிரியருடன் கூடிய ஸ்கானியா சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஸ்கானியா மெட்ரோலிங்க் சொகுசு பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சிங்கிள், டபுள், ட்ரிப்பிள் ஆக்சில்கள் கொண்டதாக இவை வந்தன.
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான சூரத்தை சேர்ந்த சித்தி விநாயக் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு முதலாவதாக சொகுசு பஸ்களை சப்ளை செய்ய ஸ்கானியா ஆர்டர் பெற்றது. இதற்காக, 7 ஸ்டார் தரத்திலான சொகுசு பஸ்களை சப்ளை செய்கிறது. இதற்காக, வடிவமைக்கப்பட்ட டிசி டிசைன் நிறுவனத்தின் இன்டிரியருடன் வடிவமைக்கப்பட்ட பஸ் சூரத்தில் நடந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
முதல் இரண்டு படங்களிலும், கூடுதல் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளிலும் காணலாம்.

முதல் பஸ்
டிரக் போக்குவரத்தில் புகழ்பெற்ற சூரத்தை சேர்ந்த சித்தி விநாயக் நிறுவனம் தற்போது பஸ் சேவையிலும் ஈடுபட உள்ளது. இதற்காக, அடுத்த 2 ஆண்டுகளில் 120 பஸ்களை ஸ்கானியா சப்ளை செய்ய உள்ளது. அதில், முதல் பஸ்சை படத்தில் காணலாம்.

டிசி இன்டிரியர்
சாய்மான லெதர் இருக்கைகளுடன் டிசி நிறுவனம் பிரிமியமாக இன்டிரியரை வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இதுதவிர, பயணிகளுக்கு தனித்தனி எல்சிடி திரை, ஸ்பா, ஸ்நாக்ஸ் பார், சென்ஹைசர் ஹெட்போன்கள் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஸ்கானியா ஈடுபட்டுள்ளது. இந்த பஸ்சுக்கான கட்டணம் ரயிலில் முதல் வகுப்பு ஏசி கட்டணத்தை ஒத்திருக்கும்.

விசாலமான வசதி
நீண்ட தூர பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து இந்த பஸ்களின் இன்டிரியரை ஸ்கானியா வடிவமைத்துள்ளது. எனவே, மிக இனிமையான பயண அனுபவத்தை வழங்கும் என ஸ்கானியா உறுதியளிக்கிறது.

பயண நேரம் குறையும்
பிற பஸ்களை காட்டிலும் இந்த பஸ்களின் மூலம் பயண நேரம் 15 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கட்டுமானம்
இந்த சொகுசு பஸ்கள் பெங்களூரில் உள்ள ஸ்கானியா ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

வால்வோவுக்கு போட்டி
இந்திய சொகுசு பஸ் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் வால்வோவுக்கு ஸ்கானியா பஸ்கள் கடும் நெருக்கடியை அளிக்கும். இரண்டு நிறுவனங்களும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








