டெல்லி ஃபார்முலா -1 கார் பந்தயம்: வெட்டல் மீண்டும் சாம்பியன்
இந்தியன் கிரான்ட் ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ரெட்புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் நேற்று பிற்பகல் நடந்தது. போட்டியை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் நடந்த பார்முலா 1 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ரெட்புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
அதை பொய்யாக்காமல் விறுவிறுப்பாக நடந்த இந்தியன் கிரான்ட் ப்ரீ பந்தயத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் 4 வது உலக சாம்பியன் பட்டத்தையும் அவர் கைப்பற்றினார். இதன் மூலம், இளம் வயதில் சாம்பியன் பட்டம் பெற்ற பட்டியலில் வெட்டலும் இணைந்தார்.
இந்த போட்டியில் 2வது இடத்தை மெர்சிடிஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க்கும், 3வது இடத்தை லோட்டஸ் அணியின் ரொமெயின் குரோஸ்ஜின் பிடித்தனர்.


Click it and Unblock the Notifications








