ரோபோட் காரை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள்

ரோபோட் காரை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள். ஆனால், இந்த காரின் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு உகந்ததாக சாத்தியப்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுளின் தானியங்கி காரை போன்றே சென்றாலும் இந்த காருக்கான தொழில்நுட்ப செலவீனம் மிக மிக குறைவு என இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் அனைத்து கார்களையும் எளிதாக இந்த தொழில்நுட்பம் மூலம் இயக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிசான் லீஃப்

நிசான் லீஃப்

நிசான் லீஃப் எலக்ட்ரிக் காரில்தான் இந்த தொழில்நுட்பத்தை பரீட்சார்த்த முறையில் வைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

லேசர் கருவிகள்

லேசர் கருவிகள்

காரின் சுற்றிலும் லேசர் கருவிகள் மற்றும் கேமராக்கள் மறைமுகமாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா மற்றும் லேசர் கருவி மூலம் இந்த கார் சாலையில் சரியாக செல்கிறது.

தானியங்கி தொழில்நுட்பம்

தானியங்கி தொழில்நுட்பம்

ஒருவேளை வழியில் பாதசாரிகள் அல்லது வாகனங்கள் குறுக்கே வந்தால் லேசர் கருவிகள் மூலம் உணர்ந்து தானாக பிரேக் போட்டு நின்றுவிடும். பின்னர், வாகனங்கள் சென்றவுடன் தானியங்கி முறையில் மீண்டும் ஆக்சிலரேட்டர் கொடுத்து நகரும்.

ஐபேட் துணை

ஐபேட் துணை

இந்த காரின் முக்கிய இயக்கத்துக்கு ஐபேட் துணை புரிகிறது. ஆம், இந்த தானியங்கி தொழில்நுட்பத்தின் மூளையாக ஐபேடை பயன்படுத்தியுள்ளனர். காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஐபேடில் சில கட்டுப்பாட்டுகள் அடங்கிய சாப்ட்வேரை பதிவு செய்து இந்த கார் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

அவசர காலத்தில்

அவசர காலத்தில்

ஒருவேளை, கம்ப்யூட்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் டிரைவர் காரை செலுத்த முடியும்.

ஜிபிஎஸ் இல்லை

ஜிபிஎஸ் இல்லை

ஜிபிஎஸ் சிஸ்டத்தை இந்த காரில் பயன்படுத்தவில்லை.சில நேரங்களில் ஜிபிஎஸ் தகவல்களில் குளறுபடிகள் இருந்தால் ரோபோட் காரின் தொழில்நுட்பம் அதனை சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, சாலைகளில் கணக்கீடுகளின் அடிப்படையில் செல்லும் வகையில் உருவாக்கியிருக்கின்றனர்.

விபத்து ஏற்படாது

விபத்து ஏற்படாது

எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும் இந்த ரோபோட் கார்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழு.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த காரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் டிரைவரின் 3டி பிம்பத்தை அடிப்படையாக கொண்டே சம்பந்தப்பட்டவர் மட்டுமே இந்த காரை இயக்க இந்த தொழில்நுட்பம் அனுமதிக்கும்.

லேசர் திறன்

லேசர் திறன்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவிகள் வினாடிக்கு 13 முறை சாலையை ஸ்கேன் செய்யும். இதேபோன்று, 164 அடிக்கு முன்னால் இருக்கும் பொருட்களையும், 85 டிகிரி கோணத்தில் சாலையையும் கண்காணித்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்இது எலக்ட்ரிக் கார் என்பதால் இந்த கார் சுற்றுச் சூழலுக்கு தீங்கு இழைக்காது என்பதும் கூடுதல் அம்சமாக கூறலாம். அடுத்த 15 ஆண்டுகளில் இது நடைமுறையில் பயன்படும் தொழில்நுட்பமாக பயன்படுத்த முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருவதாக ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

தானியங்கி கார் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, February 19, 2013, 12:21 [IST]
English summary
Self driving car revealed by Oxford University. RobotCar as it is more aptly called is adapted from Nissan Leaf electric that consists of inbuilt lasers and cameras.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+