புகாட்டி வேரோனை ஓரங்கட்டும் ஆளுமையுடன் புதிய சூப்பர் கார்!

ஏராளமான அதிவேக சூப்பர் கார்கள் மார்க்கெட்டில் இருந்தாலும், அனைத்து நிறுவனங்களின் இலக்கும் புகாட்டி வேரோன்தான். அந்த வகையில், புகாட்டி வேரோனை எளிதாக முந்தும் சக்தி கொண்ட சவால் விடும் அம்சங்களுடன் புதிய சூப்பர் காரை சின் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மனியிலுள்ள, மூனிச் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சின் நிறுவனம், இங்கிலாந்தை சேர்ந்த புரோபார்மென்ஸ் மெட்டல்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய சூப்பர் காரை உருவாக்கியிருக்கிறது.

சின் ஆர்1 என்று பெயரிடப்பட்ட இந்த புதிய சூப்பர் காரில் கார்வெட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் உயிர் கொடுக்கிறது. இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ், கட்டுமானம், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

சந்தையிலிருந்து விடை பெற இருக்கும் தற்போதைய செவர்லே கார்வெட் மாடல் காரின் 6.2 லிட்டர் எல்எஸ்3 வி8 எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை சின் நிறுவனம் டியூனிங் செய்து மேம்படுத்தியிருக்கிறது.

 பவர்

பவர்

டியூனிங் செய்யப்பட்டதன் மூலம் அதிகபட்சமாக 525 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறனை கொண்டிருக்கிறது சின் ஆர்1.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

போர்ஷே 911 ஜிடி2 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை பெற்று இந்த காரில் பொருத்தியிருக்கிறது சின்.

உந்துசக்தி

உந்துசக்தி

இந்த கார் வெறும் 2.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை தாண்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும்.

இலகு எடை கார்

இலகு எடை கார்

இலகு எடை கொண்ட சேஸீ, கார்பன் ஃபைபர் பாடி ஷெல் ஆகியவற்றை கொண்டிருக்கும் இந்த கார் 2,645 பவுண்ட் எடை கொண்டது. முன்பக்கம் 40 சதவீதம், பின்பக்கம் 60 சதவீதம் எடை இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

19 இஞ்ச் அலாய் வீல்கள், ரேஸிங் பக்கெட் இருக்கைகள் ஆகியவையும் சிறப்பு சேர்க்கிறது.

தரிசனம்

தரிசனம்

கடந்த வாரம் நடந்த குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சிறந்த டிசைன், அதிக பவர் கொண்ட இந்த மாடல் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2013, 12:06 [IST]
English summary
Germany based car maker Sin has unveiled R1 Super car at Goodwood festival of speed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+