ரேபிட் காருக்கு 100% கடன் : கூவி அழைக்கும் ஸ்கோடா!
முன்பணம் இல்லாமல், ரேபிட் காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் கடனாக பெறும் புதிய திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது. வரும் 18ந் தேதி வரை மட்டுமே இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா பிராண்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பு இருந்து வருகிறது. ஆனால், விற்பனையை அதிகரிக்க தனது பிராண்டுக்கான கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுள்ளது ஸ்கோடா. கையில் காசு இல்லாதவர்கள் கூட தனது கார்களை வாங்கும் வகையில், பல கவர்ச்சிகர கடன் திட்டங்களை ஸ்கோடா தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

இன்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் ரேபிட் காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் கடன் பெறும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறைந்த வட்டி வீதம் கொண்ட இந்த கடன் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. வரும் 18ந் தேதி வரை மட்டுமே இந்த கடன் திட்டத்தில் ரேபிட்டை முன்பணம் இல்லாமல் ஓட்டிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரேபிட் காருக்கு முதல் ஓர் ஆண்டுக்கு EMI கட்ட வேண்டாம் என்ற கடன் திட்டத்தை இந்த மாத இறுதிவரை நீட்டித்துள்ளதாகவும் ஸ்கோடா தெரிவித்துள்ளது.
ஸ்கோடாவின் கவர்ச்சிகர கடன் திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவது ஒருபக்கம் இருந்தாலும், அதன் பழைய வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற கடன் திட்டங்கள் பிராண்டு மதிப்பை குறைத்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications








