ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ஆக்டாவியா

இந்திய மார்க்கெட்டில் ஸ்கோடா ஆட்டோவுக்கு முக்கிய இடத்தை பெற்றுதந்த மாடல் ஆக்டாவியா. ஆனால், அவசரப்பட்டு பிராண்டு பெயரை மாற்றி ஆக்டாவியா மார்க்கெட்டை கெடுத்து கையை சுட்டுக் கொண்டது ஸ்கோடா ஆட்டோ.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அடுத்த தலைமுறை ஆக்டாவியா காரை ஸ்கோடா வடிவமைத்துள்ளது. இந்த புதிய கார் மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக தரிசனம் தந்தது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மாடலாக இருந்ததால், ஆக்டாவியா கனவில் பல இந்திய வாடிக்கையாளர் மிதக்க துவங்கினர். இந்த நிலையில், அடுத்த மாதம் 9ந் தேதி புதிய ஆக்டாவியா காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

மேம்படுத்திய கார்

மேம்படுத்திய கார்

கூடுதல் இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு, வசதிகள், எரிபொருள் சிக்கனம் என பலவற்றிலும் கூடுதல் மதிப்புடன் மாறியிருக்கிறது புதிய ஆக்டாவியா.

 புதிய தலைமுறை

புதிய தலைமுறை

போக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய தலைமுறை ஆக்டாவியா வடிவமைக்கப்பட்டுள்ளது. லாராவைவிட இந்த காரின் ஒட்டுமொத்த நீளத்தில் 90 மிமீ., அகலத்தில் 45 மிமீ., வீல் பேஸில் 108 மிமீ., கூட்டப்பட்டிருக்கிறது. இதுதவிர, பின்புற இருக்கையின் கால் வைக்கும் அறை பகுதி 73 மிமீ., ஹெட்ரூம் 980 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால், உட்புறத்தில் தாராள இடவசதி கிடைக்கும்.

பூட்ரூம்

பூட்ரூம்

இந்த கார் 590 லிட்டர் பொருட்களை வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியை கொண்டிருக்கிறது. இந்த காரின் நீள அகலங்கள் கூடியபோதும், எடையை 102 கிலோ வரை குறைத்துள்ளனர் ஸ்கோடா பொறியாளர்கள்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த கார் 9 ஏர்பேக்குகள், லேன் அசிஸ்ட், தானியங்கி பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

வசதிகள்

வசதிகள்

குரூஸ் கன்ட்ரோல், இன்டலிஜென்ட் ஹெட்லைட் அசிஸ்ட் உள்ளிட்ட பல தற்கால புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும்.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் இரண்டு விதமான திறன் கொண்டதாக இருக்கும். 120 பிஎச்பி மற்றும் 138 பிஎச்பி ஆற்றல் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மற்றொன்று 1.8 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 103 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 147 பிஎச்பி மற்றும் 181 பிஎச்பி ஆற்றல் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கும்.

ஸ்டார்ட் - ஸ்டாப்

ஸ்டார்ட் - ஸ்டாப்

அனைத்து வேரியண்ட்களிலும் க்ரீன் டெக் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருக்கும்.

ஆற்றல் சேமிப்பு

ஆற்றல் சேமிப்பு

ஆற்றல் சேமிப்பு அனைத்து வேரியண்ட்களும் பிரேக் ஆற்றலை சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

நேவிகேஷன், மல்டிமீடியா வசதிகளை தரும் மல்டி டச் திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2013, 17:30 [IST]
English summary
Here is a welcome news for all Skoda admirers in India. The Czech automaker has confirmed that the all new Octavia premium sedan will be unveiled in India on August 9th.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+