ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் காரின் அதிகாரப்பூர்வ படங்கள்

புதிய ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் காரின் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை வெளிவந்த ஸ்கோடா ஆக்டாவியா கார்களிலேயே இதுதான் அதிவேதத்தில் செல்லும் திறன் கொண்ட உற்பத்தி நிலை காராக வெளிவருகிறது. வரும் ஜூலை 7ந் தேதி குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கார் முதன்முறையாக தரிசனம் தர இருக்கிறது.

இடவசதி, சொகுசு, பெர்ஃபார்மென்ஸ், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட அம்சங்களை ஒருங்கே பெற்ற காராக இந்த புதிய ஆக்டாவியா ஆர்எஸ் வர இருக்கிறது. முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செயய்ப்படும் என தெரிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

220 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 184 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் 0-100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டும். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் 0-100 கிமீ வேகத்தை 8.1 வினாடிகளில் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த காரின் பெட்ரோல் மாடல் மணிக்கு அதிகபட்சம் 248 கிமீ வரை எட்டும் திறன் கொண்டது. டீசல் மாடல் மணிக்கு 232 கிமீ வேகம் வரை செல்லும்.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

மைலேஜ் விபரங்களை ஸ்கோடா ஆட்டோ இதுவரை வெளியிடவில்லை. ஆனால், முந்தைய எஞ்சின்களை விட புதிய எஞ்சின்கள் 19 சதவீதம் வரை குறைவான எரிபொருளையே மட்டுமே எடுத்துக் கொண்டு தங்களது திறனை காட்டும். ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம், பிரேக் ஆற்றலை சேமிக்கும் தொழில்நுட்பங்களும் இருக்கிறது.

 கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் ஆக்டாவியா ஆர்எஸ் காரில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. அதிக சமநிலையை தரும் எலக்ட்ரானிக் எக்ஸ்டிஎஸ் லாக் சிஸ்டத்தையும் கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டமும் கொண்டிருப்பதால் அதிவேக காராக இருந்தாலும், அதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சாதாரண ஆக்டாவியாவிலிருந்து இதனை வேறுபடுத்தும் விதமாக வடிவமைப்பில் கூடுதல் சமாச்சாரங்களை ஸ்கோடா சேர்த்துள்ளது. இதனால், இந்த கார் 88 மிமீ கூடுதல் நீளத்துடனும், 45 மிமீ கூடுதல் அகலம் கொண்டதாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 102 மிமீ கூடுதலாக இருப்பதால் உள்ளே அதிக இடவசதியை வழங்கும்.

கவர்ச்சி அம்சங்கள்

கவர்ச்சி அம்சங்கள்

ஆர்எஸ் ஸ்டைல் முன்பக்க பம்பர், ரூஃப் எட்ஜ் ஸ்பாய்லர், எல்இடி பிரேக் லைட்டுகள் ஆகியவை ஆக்டாவியா ஆர்எஸ் காரை ஸ்போர்ட்டியாக காட்சி தர வைக்கின்றன.

 கூடுதல் கவர்ச்சி

கூடுதல் கவர்ச்சி

ஹனிகோம்ப் ஏர்டேம், பனி விளக்குகள், பை-ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், 17,18 மற்றும் 19 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் காரின் கம்பீரத்துக்கும், கவர்ச்சிக்கும் துணைபுரியும் அம்சங்களாக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

கதவு கைப்பிடிகளில் மெல்லிய ஒளி உமிழும் விளக்குகள், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள், சில் பிளேட், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவை ஆக்டாவியாவின் அந்தஸ்தை உயர்த்துகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2013, 10:31 [IST]
English summary
Skoda has revealed the all new Octavia RS, what it calls the fastest production Octavia ever. Skoda will unveil the new Octavia RS at the Goodwood Festival of Speed on July 10, after which the sporty sedan will hit dealerships across Europe, starting with UK.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+