ரேபிட் அடிப்படையில் புதிய ஹேட்ச்பேக் கார்: ஸ்கோடா களமிறக்குகிறது
ரேபிட் அடிப்படையில் வடிவமைக்கப்படும் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை ஸ்கோடா ஆட்டோ அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வந்த மோட்டார் ஷோவில் இந்த தகவலை அந்த நிறுவனத்தின் சீனப் பிரிவு தலைவர் ஆன்ரியாஸ் ஹபிமேன் தெரிவித்தார்.
2011ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் விஷன் டி என்ற புதிய ஹேட்ச்பேக் காரை ஸ்கோடா பார்வைக்கு வைத்திருந்தது. இந்த காரையே தற்போது ஸ்கோடா களமிறக்க உள்ளது. ரேபிட் செடான் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டாலும், வடிவமைப்பில் புதிய ஹேட்ச்பேக் கார் பல வேற்றுமைகளை கொண்டிருக்கும்.
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் பலவிதமான பவர் வேரியண்ட்களில் வர வாய்ப்புள்ளது. ரேபிட் செடான் மற்றும் நாட்ச்பேக் கார்களை பல்வேறு மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வரும் ஸ்கோடா இந்த புதிய காரை பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்த புதிய கார் முதலில் ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு மார்க்கெட்டுகளில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஸ்கோடா விஷன் டி கான்செப்ட் கார்

ஸ்கோடா விஷன் டி கான்செப்ட் கார்

ஸ்கோடா விஷன் டி கான்செப்ட் கார்

ஸ்கோடா விஷன் டி கான்செப்ட் கார்

ஸ்கோடா விஷன் டி கான்செப்ட் கார்

ஸ்கோடா விஷன் டி கான்செப்ட் கார்



Click it and Unblock the Notifications








