பிப்ரவரியில் ரேபிட் ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கும் ஸ்கோடா
பிப்ரவரியில் ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரேபிட் அல்டிமா என்ற பெயரில் வரும் இந்த காரில் கூடுதல் அம்சங்கள் கொண்டதாக இருக்கும்.
கடந்த அக்டோபரில் புரொஜெக்டர் ஹெட்லைட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் கூடிய ரேபிட் கார் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா ரேபிட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதற்கு முன்னதாக தற்போதைய ரேபிட் காரின் டீசல் மாடலில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை கொடுத்து ஸ்பெஷல் எடிசன் மாடலாக அறிமுகம் செய்கிறது ஸ்கோடா. புதிய காரில் அல்டிமா என்ற பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கர்கள் கொண்டதாக இருக்கும்.
இரட்டை வண்ண லெதர் இருக்கைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பிப்ரவரியில் இந்த புதிய ரேபிட் அல்டிமா கார் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








