புதிய பிரிமியம் எஸ்யூவியை வடிவமைக்கும் ஸ்கோடா ஆட்டோ!

By Saravana

புதிய பிரிமியம் எஸ்யூவி மாடலை ஸ்கோடா ஆட்டோ வடிவமைத்து வருகிறது. இதனை ஸ்கோடா ஆட்டோவின் தலைவர் வின்ஃப்ரைடு வாலண்ட் தெரிவித்துள்ளார்.

ஃபோக்ஸ்வேகனின் கிராஸ்புளூ கான்செப்ட் அடிப்படையில்தான் இந்த புதிய எஸ்யூவியும் உருவாக்கப்படுகிறது.

 வடிவம்

வடிவம்

ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த எஸ்யூவி 4.6 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.

குறிப்பு: மாதிரிக்காக ஃபோக்ஸ்வேகன் கிராஸ்புளூ கான்செப்ட் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

செக்மென்ட்

செக்மென்ட்

ஹூண்டாய் சான்டா ஃபீ போன்ற பிரிமியம் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இந்த புதிய எஸ்யூவி வர இருக்கிறது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்புளூ எஸ்யூவி 2015ல் விற்பனைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து, 2016ல் இந்த புதிய ஸ்கோடா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் எஞ்சின்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்கோடா தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஃபிராங்க் வெல்ச் தெரிவித்துள்ளார். மேலும், பேஸ் மாடலில் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினும், டீசல் ஹைபிரிட் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

 மற்றொரு எஸ்யூவி

மற்றொரு எஸ்யூவி

இந்த புதிய பிரிமியம் எஸ்யூவியை தவிர புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலையும் ஸ்கோடா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2013, 13:43 [IST]
English summary

 Skoda is planning to come out with a full size SUV, AutoCarUK has learn't, which interacted with company officials. If all goes according to plan, the said SUV will be launched in 2016, according to company Chairman, Winfried Vahland.
மேலும்... #four wheeler #ஸ்கோடா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+