டெல்லி பார்முலா-1 டிராக்கில் பென்ஸ் கார் புதிய சாதனை!
புத் இன்டர்நேஷனல் பார்முலா-1 களத்தில் நடந்த பந்தயத்தில் ஒரு சுற்றை அதிவேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார். டெல்லி அருகே நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் பார்முலா-1 பந்தய களம் தற்போது இந்திய கார் ரேஸர்கள் மற்றும் பிரியர்களின் வேடந்தாங்கலாக மாறிவிட்டது.
எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக இருக்கிறது. சாதாரண ரோட்டில் தங்களது பவர்ஃபுல் கார்களை ஓட்ட முடியாமல் தவிக்கும் பலர் இங்கு கொண்டு வந்து தங்களது தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர். இந்த நிலையில், டெல்லி பார்முலா-1 பந்தய களத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் அதிவேகத்தில் ஒரு சுற்றை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளது.

பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி
பென்ஸ் நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல் கொண்ட காரான எஸ்எல்எஸ் ஏஎம்ஜி தற்போது டெல்லி பார்முலா-1 பந்தய களத்தில் ஒரு சுற்றை அதிவேகத்தில் கடந்த உற்பத்தி நிலை ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பாதுகாப்பு கார்
பார்முலா-1 பந்தயங்களில் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார்தான் பாதுகாப்பு வாகனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சாதனை
5.125 கிமீ நீளம் கொண்ட ஒரு சுற்றை 2 நிமிடங்கள் 14.521 வினாடிகளில் இந்த கார் கடந்து சாதனை படைத்துள்ளது.

சாதனை புரிந்த டிரைவர்
ஜெர்மனியை சேர்ந்த ஏஎம்ஜி டிரைவிங் இன்ஸ்ட்ரக்டர் நார்மன் சைமன் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரை அதிவேகத்தில் ஓட்டி வந்து இந்த சாதனையை பதிவு செய்தார்.

பென்ஸ் தலைவர் பெருமிதம்
இந்த சாதனை படைக்கப்படதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியப் பிரிவு தலைவர் எபர்ஹார்டு கெர்ன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், ரேஸ் உலகில் பல்வேறு போட்டிகளில் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி புதிய சாதனைகளை பதிவு செய்து சிறந்த தொழில்நுட்பத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. உற்பத்தி நிலையிலுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் கார் இந்த சாதனையை பதிவு செய்துள்ளது உண்மையிலே மிகப் பெரிய விஷயமாக கருதுகிறோம்,"என்றார்.


Click it and Unblock the Notifications








