குளுகுளு வசதியுடன் புதிய சோனாலிகா டிராக்டர் அறிமுகம்!
குளுகுளு வசதி கொண்ட கேபினுடன் புதிய உயர் ரக டிராக்டர் மாடலை சோனாலிகா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
வேர்ல்டுடிராக் 90 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய டிராக்டர் 90 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர் எஞ்சினுடன் வந்துள்ளது.

கூடுதல் பாதுகாப்புக்காக ஆயில் பிரேக் பொருத்தப்பட்ட இந்த டிராக்டரில் டிரைவருக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசி, கப் ஹோல்டர்கள், 2 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றை இந்த டிராக்டர் கொண்டுள்ளது.
மேலும், டிரைவருக்கு முன்புறம், பின்புற வைன்ட்ஷீல்டு கண்ணாடிகளில் வைப்பர்களும் இருக்கின்றன.
புதுமையான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த டிராக்டர் நாடு முழுவதும் உள்ள அனைத்து சோனாலிகா டீலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.14.45 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








