அனைத்து ஹூண்டாய் கார்களுக்கும் அதிரடி சலுகைகள்: விபரம்

பண்டிகை காலம் முடிந்துவிட்ட நிலையில், ஆண்டு கடைசி நெருங்குவதையொட்டி, கார் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகின்றன.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களுக்கும் தற்போது அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

5 மில்லியன் கொண்டாட்டம்

5 மில்லியன் கொண்டாட்டம்

சென்னை ஆலையில் கடந்த மாதம் 5 மில்லியன் கார்களை உற்பத்தி செய்த சாதனையை கொண்டாடும் விதத்தில் சிறப்பு சலுகைகளை ஹூண்டாய் வழங்குகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் பெருமதியுள்ள தங்க நாணயங்களை வெல்லும் வாய்ப்பை ஹூண்டாய் அறிவித்துள்ளது. இதுதவிர, அரசு ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் சிறப்பு சலுகை திட்டங்களை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயான் கார்

இயான் கார்

ரூ.2.49 லட்சம் என்ற சிறப்பு ஆரம்ப விலையை இயான் காருக்கு ஹூண்டாய் அறிவித்துள்ளது. இதன்மூலம், ரூ.30,000க்கும் கூடுதலான தள்ளுபடியில் தற்போது இயான் கிடைக்கிறது.

சான்ட்ரோ

சான்ட்ரோ

சான்ட்ரோ காருக்கு ரூ.56,217 மதிப்புடைய சேமிப்பு சலுகைகளை ஹூண்டாய் வழங்குகிறது. இந்த மாதம் சான்ட்ரோவை கடன் திட்டத்தில் வாங்குபவருக்கு முதல் 5 தவணைகளை நிறுவனமே செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10 காருக்கு ரூ.56,215 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

 ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.38,000 வரை சலுகைகளையும், டீசல் மாடலுக்கு ரூ.43,000 வரை சலுகைகளையும் பெறலாம்.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா பெட்ரோல் காருக்கு ரூ.30,000 சலுகைகளையும், டீசல் மாடலுக்கு ரூ.45,000 வரை சலுகைகளையும் பெற முடியும்.

 ஹூண்டாய் எலன்ட்ரா

ஹூண்டாய் எலன்ட்ரா

ஹூண்டாய் எலன்ட்ரா காருக்கு அதிகபட்சமாக ரூ.75,215 வரை சலுகைகளை பெறலாம்.

 ஹூண்டாய் சொனாட்டா

ஹூண்டாய் சொனாட்டா

ஹூண்டாய் சொனாட்டா காரையும், சான்டா ஃபீ எஸ்யூவியையும் 4.99 சதவீத வட்டி வீதம் கொண்ட கடன் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பையும் பெறலாம்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இங்கே வழங்கப்பட்டிருக்கும் சலுகைகள் இந்த மாதம் வரை அமலில் இருக்கும். மேலும், சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். சரியான தகவல்களுக்கு அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2013, 11:13 [IST]
English summary
Hyundai Motor India is offering huge discounts to boost sales. Now Hyundai customers can get Benefits of up to Rs. 75,000. Take a look at this amazing offers from Hyundai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+