புதிய இரட்டை வண்ணக் கலவையில் ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக்
புதிய இரட்டை வண்ணக் கலவைகளில் ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக் கார் புருஸ்ஸெல்ஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் வண்ண பாடி மற்றும் கருப்பு வண்ண கூரை மற்றும் கருப்பு வண்ண பாடியுடன் மஞ்சள் வண்ணம் கொண்ட கூரை என இரண்டு வண்ணங்களில் ஸ்பெஷல் எடிசன் எவோக் அறிமுகமாகியிருக்கிறது.
எவோக் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 150 பிஎஸ் பவரை மற்றும் 190 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் இரண்டு மாடல்களில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களிலும், 3 கதவுகள் கொண்டதாகவும், 5 கதவுகள் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும். இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வரும் மே மாதம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஸ்லைடரில் ஸ்பெஷல் எடிசன் எவோக் காரின் பிரத்யேக படங்களை கண் குளிர கண்டு ரசியுங்கள்.

ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக்

ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக்

ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக்

ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக்

ஸ்பெஷல் எடிசன் ரேஞ்ச்ரோவர் எவோக்



Click it and Unblock the Notifications








