தென் கொரியாவில் மேம்படுத்தப்பட்ட சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி அறிமுகம்

இந்தியா வர இருக்கும் கொரண்டோ எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடலை மஹிந்திராவின் கீழ் செயல்படும் சாங்யாங் அறிமுகம் செய்துள்ளது. கொரண்டோ சி என்ற பெயரிடப்பட்ட இந்த எஸ்யூவி நகர்ப்புற பயன்பாட்டுக்கும், சாகச பயணங்களுக்கும் ஏற்ற வகையில் காம்பெக்ட் மாடலாக வடிவமைக்கப்பட்டது.

சாங்யாங் பிராண்டில் ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கு அடுத்து இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை இந்தியாவில் மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எஸ்யூவியை மஹிந்திரா இந்தியா சாலைகளில் வைத்து பலமுறை சோதனை நடத்தியுள்ளது. புதிய கொரண்டோ சி எஸ்யூவியின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புறம்

வெளிப்புறம்

வெளிப்புறத்தை பொறுத்தவரையில் முகப்பு பக்கம் அதிகம் மாற்றம் கண்டிருக்கிறது. கிரில், ஏர்டேம் ஆகியவை டிசைன் மாற்றப்பட்டுள்ளது. கிரில் மேலே மெல்லிய குரோம் பூச்சுடன் கூடிய கம்பி சொருகப்பட்டுள்ளது. பனி விளக்குகள் அறையிலும் மாற்றம் செய்யப்பட்டு முகப்பு அருமையாக இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பின்புறத்தில் டெயில் லைட் கிளஸ்ட்டரில் சி வடிவத்திலான கெய்டு லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கொரண்டோ சி என்பதை குறிக்கும் வகையில் அவை டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 18 இஞ்ச் அலாய் வீல்கள் கூடுதல் கம்பீரத்தையும், மிடுக்கையும் தருகின்றன.

வசதிகள்

வசதிகள்

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் கீ சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

புதிய கொரண்டோ சி எஸ்யூவியின் எரிபொருள் சிக்கனம் முந்தைய மாடலைவிட 8.4 சதவீதம் மேம்பட்டிருக்கிறது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் லிட்டருக்கு 12.8 கிமீ மைலேஜையும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜையும் தரும்.

அடுத்த ஆண்டு இந்தியாவில்...

அடுத்த ஆண்டு இந்தியாவில்...

நகர்ப்புற இளைய சமுதாய வாடிக்கையாளர்களை குறிவைத்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா - சாங்யாங் கூட்டணி.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2013, 18:24 [IST]
English summary
Ssangyong Korando C, the compact premium SUV, introduced in South Korea in 2011, has received its first facelift. The new Korando C, dubbed an Urban Leisure Vehicle (ULV), is an SUV which has been designed mainly for use in urban areas.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+