மஹிந்திராவின் அடுத்த புதிய எஸ்யூவி - டிரெய்லர்
ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவி கொடுத்த உற்சாகத்தில் சாங்யாங் பிராண்டில் அடுத்து கொரெண்டோ எஸ்யூவியையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா தீவிரமாக இறங்கியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் பிராண்டில் முதல் மாடலாக ரெக்ஸ்டன் எஸ்யூவியை கடந்த சில மாதங்களுக்கு முன் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது.
பிரிமியம் ரகத்தில் வந்த இந்த பிரிமியம் எஸ்யூவி கடந்த டிசம்பர் வரையில் இதுவரை 1,500 முன்பதிவுகளை பெற்றிருக்கிறது. இதனால் பெரும் உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா அடுத்து சாங்யாங் பிராண்டில் கொரெண்டோ எஸ்யூவியையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான, சந்தை ஆய்வுப் பணிகளை மஹிந்திரா தீவிரமாக செய்து வருகிறது. கொரெண்டோ பற்றிய ஒரு முன்னோட்டத்தை ஸ்லைடரில் காணலாம்.

நீண்ட பாரம்பரியம்
1983ம் ஆண்டு கொரெண்டோ எஸ்யூவி முதன்முறையாக தனது தாயகமான தென் கொரிய மார்க்கெட்டில் அறிமுகமானது.

மூன்றாம் தலைமுறை
2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை கொரெண்டோ எஸ்யூவிதான் தற்போது இந்தியாவில் அறிமகம் செய்யப்பட உள்ளது.

கான்செப்ட் மாடல்
2008ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் சி 200 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடல்தான் தற்போது இந்தியா வரும் உற்பத்தி நிலையிலுள்ள கொரெண்டோ.

மாடல்கள்
முன்பு 5 மற்றும் 3 கதவுகள் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 5 கதவுகள் கொண்ட மாடலில் கிடைக்கிறது

தாராள இடவசதி
உட்புறத்தில் அதிக இடவசதி கொண்ட எஸ்யூவி மாடல். இதில், 5 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்.

இன்டிரியர்
முந்தைய மாடல்களை காட்டிலும் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் இன்டிரியர் அதிக வசதிகள் மற்றும் தரமாகவும், கண்ணை கவரும் விதத்திலும் இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டர்களையும் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்
தாயகமான தென் கொரியாவில் ஹூண்டாய் ஐஎக்ஸ் 35 மற்றும் கியா ஸ்போர்ட்டேஜ் ஆகிய கார்களுடன் கொரெண்டோ போட்டியிடுகிறது.

எஞ்சின்
2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும்.

மொபைல் வைக்க இடம்
சென்ட்ரல் கன்சோல் கீழ் புறத்தில் மொபைல்போன், பேனா, நாட்குறிப்பு உள்ளிட்டவற்றை வைப்பதற்கான இடவசதி இருக்கிறது.

ஸ்கோடா யெட்டி
ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு இணையான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.14 லட்சத்துக்குள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications








