மும்பையில் சாங்யாங் ரோடியஸ்: சோதனை ஓட்டத்துக்கு ஆயத்தம்?

மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சாங்யாங் மோட்டார்ஸ் வசம் ரோடியஸ் என்ற 11 சீட்டர் எம்பிவி கார் இருப்பது குறித்து பிப்ரவரியில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். சாங்யாங் தயாரிப்புகளை ஒவ்வொன்றாக இந்தியாவில் களமிறக்கி வரும் மஹிந்திரா இந்த பெரிய சைஸ் எம்பிவி காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தோம்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மும்பையிலுள்ள மஹிந்திராவின் வாகன ஆலை அருகே ரோடியஸ் எம்பிவி கார் ஒன்று சமீபத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த காரை டீம் பிஎச்பி உறுப்பினர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். இந்திய தட்பவெப்ப நிலை, சாலை நிலைகளில் வைத்து ரோடியஸ் சோதனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஃபோர்டு என்டெவர் எஸ்யூவியைவிட 70 மிமீ கூடுதல் நீளம் கொண்டது. 3,000 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் உள்புறத்தில் சிறந்த இடவசதியை அளிக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 155 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எக்ஸ்டிஐ 200 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

ஆல் வீல் டிரைவ்

ஆல் வீல் டிரைவ்

இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. சாலைநிலைகளை பொறுத்து ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

மொத்தம் 4 வரிசை இருக்கை அமைப்பை இந்த கார் கொண்டிருக்கிறது. இருக்கை வசதி 2+3+3+3 இருக்கை அமைப்பு கொண்டது. தேவைப்பட்டால் இதன் பின் இருக்கைகளை மடக்கிக் கொள்ளலாம். 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகளை மடக்கி விரிக்க முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பிரேக் அசிஸ்ட் சிஸ்டம்(பிஏஎஸ்), ஆக்டிவ் ரோல்ஓவர் சிஸ்டம்(ஏஆர்பி), எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம்(இஎஸ்பி), ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்ஸ் ஆகிய ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

குவார்க்கி டிசைன் கொண்ட டேஷ்போர்டு பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும், சென்ட்ரல் கன்சோலுக்கு மேல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் பொருத்தப்பட்டுள்ளது.

 கன்ட்ரோல் சுவிட்சுகள்

கன்ட்ரோல் சுவிட்சுகள்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் போன் கன்ட்ரோல் சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதல் வசதி

கூடுதல் வசதி

சாகச பயணங்கள் மற்றும் குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கு ஏற்றவாறு கூரையின் மேற்புறத்தில் லக்கேஜ் கெனாப்பியை இதில் பொருத்த முடியும். இதனால், உட்புறத்தில் இடவசதி தாராளமாக கிடைக்கும்.

கஸ்டமைஸ் டூரிஷ்மோ

கஸ்டமைஸ் டூரிஷ்மோ

சியோல் வர்த்தக மையத்தில் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட டூரிஷ்மோ.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் விலையையொட்டியாகவே இதன் விலை இருக்கும். ரெக்ஸ்டன் ரூ.17.67 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2013, 15:24 [IST]
English summary
The Ssanyong Rodius has been spotted in India for the first time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+