மஞ்சள் நிற போர்ஷே காரில் சென்னையை வலம் வரும் சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் சார்பாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, காதலில் விழுந்துவிட்டாராம். இதனை அவரே சொல்லியிருக்கிறார். யாருடன் என்று கேட்டால் தான் புதிதாக வாங்கியிருக்கும் போர்ஷே காருடன்தான் காதலில் விழுந்துவிட்டாதாக சொல்லி சிரிக்கிறார். அதவும், சென்னை அணியின் மஞ்சள் நிற சீருடை கலரிலேயே புதிய போர்ஷே பாக்ஸ்டர் காரை வாங்கியிருக்கிறார்.
அவ்வப்போது ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இந்த காரில் சென்னை வலம் வந்தபடியே இருக்கிறாராம். மேலும், விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு வருவதற்கும், செல்வதற்கும் இந்த புதிய போர்ஷே காரையே பயன்படுத்துகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பிறந்தநாளன்று இந்த காரை வாங்கினேன்.
மஞ்சள் நிறம் எனக்கு பிடித்த நிறம். அத்தோடு, நான் விளையாடும் சென்னை அணியின் முக்கிய வண்ணமும் அதுவே என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். சமீபத்தில் ரவீந்திர ஜடேஜாவோடு சென்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு சுரேஷ் ரெய்னா செல்லும்போது கிளிக்கிய படங்களையும், அவரது பேட்டியின் தொடர்ச்சியையும் ஸ்லைடரில் காணலாம்.

சென்னை பிடிக்கும்
பத்திரிக்கைக்கு ரெய்னா அளித்த பேட்டியில், சென்னை நகர் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த சாலைகள் என்னை கவர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக சென்னை எனக்கு நல்ல பரிட்சயம். மேலும், இங்குள்ள வழிகளும் நன்றாக தெரியும் என்பதால் நானோ டிரைவிங் செய்து செல்கிறேன்," என்றார்.

டோணியுடன் பயணம்
சென்னையில் டோணியுடன் பைக்கில் அடிக்கடி பயணம் செய்ததும் வழிகள் நன்றாகத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. அனைவரும் கார் பைக்கில் செல்லும் போது கவனமாகவும், விழிப்பாகவும் செல்லுங்கள்," என்று கூறியுள்ளார்.

சிறந்த அணி
சென்னை அணியில் சிறந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் சிறந்த சமநிலை கொண்ட அணியாக இருக்கிறது. நாங்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.

நண்பர் ஜட்டு
நண்பர் ரவீந்திர ஜடேஜா பற்றி கூறுகையில்," அவருக்கு கிரிக்கெட் மட்டுமல்ல, நகைச்சுவையும் கைவந்த கலை. பொழுதுபோக்குவதற்கு சிறந்த நண்பர்.

போர்ஷே கார் பற்றி
நீண்ட நாளாக ஸ்போர்ட்ஸ் கார் வாங்குவது கனவாக இருந்தது. இப்போது, போர்ஷே பாக்ஸ்டர் மூலம் நிறைவேறியிருக்கிறது. எனக்கு இந்த காரை ஓட்டுவது மிகவும் த்ரில்லாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.

போர்ஷே பாக்ஸ்டர்
இந்த காரில் 310 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 3.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் தொட்டுவிடும்.

போர்ஷே கார் வாங்கிய சுரேஷ் ரெய்னா



Click it and Unblock the Notifications








