இந்தியாவில் சுஸுகி ஹஸ்லர் அறிமுகமாவதாக பரபரப்பு
கடந்த மாதம் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட சிறிய வகை கிராஸ்ஓவர் காரான சுஸுகி ஹஸ்லர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வேகன் ஆர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கார் மினி எஸ்யூவி டிசைன் அமைப்பு கொண்டது. குறைவான விலையில் எஸ்யூவி டிசைன் அமைப்பை விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், இந்த கார் இந்தியா வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக வழக்கம்போல் தகவல்கள் உலா வரத் துவங்கியுள்ளன.

660சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் இந்தியாவில் கே சீர்ஸ் பெட்ரோல் எஞ்சினுடன் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.6.15 லட்சம் விலையிலான இந்த கார் லிட்டருக்கு 29.2 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








