புதிய 250சிசி பைக்கை களமிறக்கும் சுஸுகி
புத்தம் புதிய 250சிசி பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம். 100லிருந்து 150, அடுத்து 200சிசி பைக்குகளின் மீதிருந்த மோகம், இப்போது 250சிசி மார்க்கெட் சூடுபிடித்துள்ளது.
இதனால், அடுத்து 250சிசி மார்க்கெட்டில் பைக் மாடல்கள் வரிசை கட்டத் துவங்கியிருக்கிறது. கவாஸாகி நின்ஜா 300, ஹோண்டா சிபஆர் 250ஆர், ஹயோசங் ஜிடி 250ஆர் பைக்குகள் இந்த மார்க்கெட்டில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சுஸுகி நிறுவனமும் 250சிசி மார்க்கெட்டில் குதிக்கிறது. புதிய 250சிசி பைக்கை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது சுஸுகி.
சுஸுகி இனசுமா 250சிசி பைக்தான் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பைக்கில் 248சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் விற்பனைக்கு வரும் இந்த புதிய பைக்கின் எஞ்சின் 23.7 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய பைக்கை பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்ய சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








