ஜப்பானில் 2014 சுஸுகி ஸ்விப்ட் கார் அறிமுகம் - விபரம்
மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்விப்ட் காரை ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலில் பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் புதிய வண்ணங்கள் மட்டுமே கூடுதல் அம்சமாக இருந்தது.
ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஸ்விப்ட் காரில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை கொண்டிருக்கிறது. அதுகுறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
பகல் நேர ரன்னிங் விளக்குகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. முகப்பு கிரில் மற்றும் பம்பர் டிசைன் மாற்றம் கண்டுள்ளது.

ஸ்பீடோமீட்டர் டயல்
வேகத்துக்கு ஏற்ப எரிபொருள் சிக்கனத்தை குறிக்கும் வகையில், வண்ணம் மாறும் பேக்லிட் டயல்கள் புதிய அம்சமாக இருக்கிறது.

ஆற்றல் சேமிப்பு
புதிய ஸ்விப்ட் காரில் ஆற்றல் சேமிப்பு மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

எஞ்சின்
1.2லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் கூடுதல் தொழில்நுட்பங்களுடன் வந்திருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ்
2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும்.

மைலேஜ்
புதிய ஸ்விப்ட் காரின் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் மைலேஜ் மேம்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 26.4 கிமீ மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்கள்
மொத்தம் 7 வேரியண்ட்களில் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ஜி, டிஜேஇ, எக்ஸ்எல் - டிஜேஇ, எக்ஸ்எஸ்- டிஜேஇ, எக்ஸ்ஜி, எக்ஸ்எல், ஸ்பெஷல் எடிசன் ஆர்எஸ் மற்றும் எக்ஸ்எஸ் ஆகிய வேரியண்ட்களில் வந்துள்ளது.

ஸ்விப்ட் ஆர்எஸ்
ஸ்விப்ட் ஆர்எஸ் ஸ்பெஷல் எடிசன் காருக்கு ஸ்பெஷலான பாடி கிட் பொருத்தப்பட்டிருக்கிறது. இது கூடுதல் கம்பீரத்தை அளிக்கிறது.

பேடில் ஷிப்ட்
ஆட்டோமேட்டிக் வேரியண்ட் பேடில் ஷிப்ட்டுடன் வந்துள்ளது.

விலை
இந்திய மதிப்பில் ரூ.7.54 லட்சம் முதல் ரூ.10.54 லட்சம் வரையில் வேரியண்ட்டுக்கு தகுந்தவாறு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








