2014 சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்தன
சிறிய மாற்றங்களுடன் கூடிய 2014 மாடல் ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், எதிர்பாராதவிதமாக போலந்து நாட்டு சுஸுகியின் இணையதளத்தில் இந்த படங்கள் வெளியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஸ்விப்ட்டில் அதிக மாற்றங்கள் தெரியவில்லை. ஹூண்டாய் ஐ20 காரில் அறிமுகம் செய்யப்பட்டது போன்று பனி விளக்குகளை சுற்றிலும் பகல் நேர ரன்னிங் விளக்குகள் புதிதாக தெரிகிறது.புதிய தங்க நிற வண்ணத்திலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இன்டிரியரிலும் அதிக மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. மேலும், எஞ்சினில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்தும் தகவல் இல்லை. வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போதுதான், முழுமையான தகவல்கள் தெரியவரும். தற்போது வெளியான ஸ்விப்ட் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...












Click it and Unblock the Notifications








