விற்பனையில் 3 மில்லியனை கடந்த சுஸுகி ஸ்விப்ட்

கடந்த 2004ம் ஆண்டு ஸ்விப்ட் காரை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. 2005ல் இந்தியாவில் ஸ்விப்ட் காரின் உற்பத்தியை மாருதி துவங்கியது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஸ்விப்ட்டுக்கு வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், சிறந்த காருக்கான ஏராளமான ஆட்டோமொபைல் விருதுகளையும் பெற்றுள்ளது.
ஜப்பான், இந்தியா உள்பட சர்வதேச அளவில் மொத்தம் 120 நாடுகளில் ஸ்விப்ட் காரை ஜப்பானிய நிறுவனமான சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், சுஸுகி ஸ்விப்ட் கார்களின் விற்பனை 3 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் 2 மாதங்களில் இந்த சாதனை அளவை ஸ்விப்ட் கடந்துள்ளது.
இதில், சுஸுகியின் துணை நிறுவனமாக செயல்படும் மாருதி இந்தியாவில் 1.35 மில்லியன்(45%) ஸ்விப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்விப்ட் கார்களின் மொத்த விற்பனையில் 13 சதவீதம் ஜப்பானில் விற்பனையாகி இருக்கின்றன. இதில், ஐரோப்பிய மார்க்கெட்டில் 23 சதவீதம் அளவுக்கு பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.
மீதமுள்ளவை பிற மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சுஸுகி தெரிவித்துள்ளது. மேலும், ஸ்விப்ட்டுக்கு வாடிக்கையாளர்கள் நல்கி வரும் ஆதரவையும் சுஸுகி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








