மாருதி நிறுவனத்தில் பங்கு மூலதனத்தை உயர்த்த சுஸுகி திட்டம்!!
மாருதி நிறுவனத்தில் இருக்கும் பங்கு மூலதனத்தை 75 சதவீதமாக உயர்த்துவதற்கு சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியில் பாதிக்கு மேலான பங்கு மூலதனத்தை ஜப்பானிய நிறுவனமான சுஸுகி வைத்திருக்கிறது.

தற்போது மாருதி நிறுவனத்தின் 52.6 சதவீத பங்குகள் சுஸுகி வசம் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.36,000 கோடியாகும். இந்த நிலையில், மாருதி நிறுவனத்தில் இருக்கும் பங்கு மூலதனத்தை 75 சதவீதமாக அதிகரிப்பதற்கு சுஸுகி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ரூ.10,000 கோடியை முதலீடு செய்ய சுஸுகி திட்டமிட்டுள்ளது. ஆப்ரிக்கா, மேற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய மார்க்கெட்டுகளுக்கான கார் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலை மாருதி வசமே விட்டுவிடும் வகையில் இந்த முயற்சியை சுஸுகி எடுக்க உள்ளது.
இந்திய மார்க்கெட்டில் 40 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை வைத்திருக்கும் மாருதி, சுஸுகி நிறுவனத்தின் சர்வதேச கார் உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐரோப்பிய நாடுகளை தவிர சர்வதேச ஏற்றுமதிக்கான விவகாரங்களை மாருதியின் கீழ் கொண்டு வரும் விதமாக இந்த முயற்சிகளை சுஸுகி மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








