விற்பனை மந்தம்.. நானோ உற்பத்தியை 80% குறைத்த டாடா

By Saravana
Tata Nano
நானோ காரின் விற்பனை படுமோசமாகியுள்ளதால், அதன் உற்பத்தியை 80 சதவீதம் வரை குறைத்துவிட்டது டாடா மோட்டார்ஸ்.

குறைந்த விலை காரான நானோவின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் எடுத்து வருகிறது.

ஆனால், அதற்கு தற்போது போதிய பலன் கிடைக்கவில்லை. இதனால், அந்த நிறுவனம் தற்போது நானோ காரால் கடும் நெருக்கடியில் இருக்கிறது.

குஜராத், சனந்த்தில் உள்ள நானோ கார் ஆலையில் டாடா அதிக முதலீடு செய்துள்ளது. அந்த ஆலையில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நானோ விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் இதுவரை ஒருமுறை கூட அந்த ஆலைய முழு உற்பத்தியை எட்டவில்லை.

இந்த நிலையில், ஒட்டுமொத்த கார் மார்க்கெட்டும் மந்தமாகியுள்ள நிலையில், நானோ காரின் விற்பனை படுமந்தமாகியுள்ளது. கடந்த இரு மாதங்களாக சராசரியாக 1,500 நானோ கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதனால், சனந்த் ஆலையில் தற்போது 14,000 நானோ கார்கள் இருப்பில் தேங்கியுள்ளன. இதையடுத்து, நானோ காரின் உற்பத்தியை 80 சதவீதம் வரை குறைத்துள்ளது டாடா.

இதனிடையே, நானோ பிராண்டை தூக்கி நிறுத்தும் விதமாக மேம்படுத்தப்பட்ட நானோ கார் மாடலை டாடா விரைவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், சிஎன்ஜி, டீசல் உள்ளிட்ட மாடல்களும் தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2013, 11:16 [IST]
English summary
Due to weak sales of Nano, Tata Motors has slashed the world’s cheapest car production at its Sanand plant by 80%. According to sources, Tata Motors has over 14,000 Nano in stock currently at their plant in Sanand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+