டாடா இண்டிகா விஸ்டா டி90 விற்பனை திடீர் நிறுத்தம்?!
பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காரான இண்டிகா விஸ்டா டி90யின் தயாரிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பில் இருக்கும் கார்களை தீர்த்து கட்டுவதற்காக டீலர்கள் தீவிர முயற்சிகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த காருக்கு தற்போது அதிக தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

என்னாச்சு?
கடந்த ஜனவரியில்தான் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விற்பனைக்கு வந்து இன்னும் ஓர் ஆண்டுகூட நிறைவு பெறாத நிலையில், இந்த காரை மார்க்கெட்டிலிருந்து டாடா மோட்டார்ஸ் விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஈடுகொடுக்க முடியவில்லை
புன்ட்டோ, ஐ20 கார்களின் பவர்ஃபுல்லான டீசல் மாடல்களுக்கு போட்டியாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், போனியாகததால் இந்த காரின் உற்பத்தியை டாடா நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

எஞ்சின்
சாதாரண விஸ்டா காரில் இருக்கும் 74 பிஎச்பி பவர் கொண்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்து இந்த காரில் பொருத்தியிருந்தது டாடா.

காரணம் என்ன?
விஸ்டா டி90 காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டதற்கு இந்த காருக்கு மாற்றாக புதிய பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது. விஸ்டா அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வரும் ஃபால்கன் 4 என்ற காரை டி90க்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மாடல் வருகை
புதிய ஃபால்கன் 4 என்ற அந்த கார் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இது தற்போதைய விஸ்டா காரின் டாப் வேரியண்ட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர, மான்ஸா காருக்கு மாற்றாக ஃபால்கன் வரிசையில் புதிய செடான் காரையும் டாடா அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








