டாடா இசிஎஸ் செடானின் 'அசுர' சாதனை: லிம்கா புத்தகத்தில் இடம்!

எரிபொருள் சிக்கனம், சிறந்த பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் சிறந்த கார் இசிஎஸ் என்பதை அனைவரும் எடுத்துக் காட்டும் விதமாக இடைநில்லாமல் செல்லும் வகையில் இசிஎஸ் செடானை வைத்து ஒரு நிகழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் நடத்தியது. ஆட்டோகார் இண்டியா இதழும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 19 மாநிலங்கள் வழியாக நாட்டின் நான்கு முனைகளையும் டாடா இசிஎஸ் தொட்டுள்ளது. அதுவும் 15 நாட்களில். இந்த சாதனைப் பயணத்தை அங்கீகரித்து தனது சாதனைப் புத்தகத்தில் இந்த சாதனையை லிம்கா புத்தகம் பதிய வைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த சாதனைக் குறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் ரஞ்சித் யாதவ் கூறுகையில்," இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் செடான் கார்களில் டாடா இசிஎஸ் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
கிளாஸி டிசைன், சிறந்த எஞ்சின் மற்றும் சரியான விலை என வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை கொடுத்து வருகிறது இசிஎஸ்.
மேலும், இந்த சாதனைப் பதிவு மூலம் சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட காராகவும் இசிஎஸ் தன்னை நிரூபித்துள்ளது லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது,"என்றார்.


Click it and Unblock the Notifications








