ஜன.13ல் அறிமுகமாகிறது பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ கார்!!
ஜனவரி 13ந் தேதி பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ட்விஸ்ட் என்ற பெயரில் வரும் இந்த புதிய நானோ மாடல் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் நானோ காரில் பொருத்தப்பட்டிருக்கும்.
சாதாரண நானோ மாடலைவிட பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட மாடல் ரூ.15,000 வரை கூடுதலாக இருக்கும்.
பவர் ஸ்டீயரிங் நானோ கார் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








