மான்ஸாவுக்கு 60 சதவீத பணம் வாபஸ் - டாடாவின் அடுத்த அதிரடி
மான்ஸா செடான் காருக்கு அதிரடி பண வாபஸ் உத்தரவாத திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
கார் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு அதிரடி திட்டங்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்து வருகிறது. மான்ஸா கிளப் கிளாஸ் டீசல் காரின் விலையை ரூ.50,000 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டது.

இதனால், தற்போது மான்ஸா கிளப் கிளாஸ் காரின் விலை ரூ.6.49 லட்சத்திலிருந்து ரூ.5.99 லட்சமாக குறைத்துள்ளது.
இந்த அதிரடி அறிவிப்புடன் மற்றுமொரு சலுகையையும் அறிவித்துள்ளது. மான்ஸா கிளப் கிளாஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் கழித்து காரை விற்க விரும்பினால், காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே வாங்கிக் கொள்ளும்.
மேலும், காரின் விலையில் 60 சதவீதத்தை திரும்ப வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு வாடிக்கையாளர்களை கவரும் என டாடா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








