அடுத்த தலைமுறை பிளாட்பார்மை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்!!
ஒரே பிளாட்பார்மில் வேறு வேறு ரக கார்களை டிசைன் செய்யும் வசதி கொண்ட மாடுலர் பிளாட்ஃபார்மை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவு தலைவர் டிம் லெவர்டன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட மிகப்பெரிய வாகன குழுமங்கள் இதுபோன்ற மாடுலர் பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்தி பல்வேறு பிராண்டுகளுக்கான கார்களை ஒரே பிளாட்ஃபார்மில் வடிவமைக்க துவங்கிவிட்டன. இந்த நிலையில், Advanced Modular Platform(AMP) என்ற பெயரில் இந்த புதிய பிளாட்ஃபார்மை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது.

வசதி
மாடுலர் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் கார்களை வசதிகேற்ப டிசைனில் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். நீளத்தை, கூட்டவோ, குறைக்கவோ முடியும். உதாராணமாக, ஹேட்ச்பேக், செடான், காம்பெக்ட் எஸ்யூவி கார்களை ஒரே பிளாட்ஃபார்மில் வடிவமமைக்க முடியும்.

செலவு மிச்சம்
வடிவமைப்புக்கான நேரம், செலவு ஆகியவை வெகுவாக மிச்சப்படும். எனவே, குறுகிய காலத்தில் பல புதிய மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த ஏதுவாகும்.

மோனோகாக் சேஸீ
மோனோகாக் சேஸீ கொண்ட ஹேட்ச்பேக், செடான், காம்பெக்ட் எஸ்யூவி கார்களை டாடா இந்த பிளாட்ஃபார்மில் வடிவமைக்க உள்ளது.

உற்பத்தி
2015ம் ஆண்டுக்கு பின்னர் வடிவமைக்கப்படும் அனைத்து டாடா கார்களும் ஏஎம்பி பிளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்பட உள்ளன.

முதல் இந்திய நிறுவனம்
ஏஎம்பி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படும் டாடா கார்கள் உற்பத்தி நிலையை எட்டும்போது, மோடுலர் பிளாட்ஃபார்மில் கார் வடிவமைக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெறும்.

ரத்தன் டாடா வாக்கு
2020ம் ஆண்டில் பிற நிறுவனங்களோடு போட்டி போடும் வகையிலான, உயர் தரத்தில் கார்களை டாடா மோட்டார்ஸ்விற்பனைக்கு கொண்டு வரும் என்று ரத்தன் டாடா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூறியிருந்தார். இந்த வாக்கு ஏஎம்பி பிளாட்ஃபார்ம் மூலம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








