ஜேஎல்ஆர் கைவண்ணத்தில் வரும் 2 புதிய டாடா எஸ்யூவிகள்!!
ஜாகுவார் லேண்ட்ரோவர்(ஜே.எல்.ஆர்.,) நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் டாடா மோட்டார்ஸ் பொறியாளர்கள் இணைந்து 2 புதிய எஸ்யூவி கார்களை வடிவமைத்து வருகின்றனர். இந்த 2 புதிய எஸ்யூவி மாடல்களும் டாடா பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இந்த எஸ்யூவி தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத டாடா எஞ்சினியர்களிடம் இருந்து லைவ்மின்ட் இதழின் செய்தியாளர் ஒருவர் இந்த தகவல்களை பெற்றுள்ளார்.

மேலும், இந்த 2 புதிய எஸ்யூவிகளும் வாடிக்கையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினருக்கும் இன்ப அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 2 புதிய எஸ்யூவி மாடல்களும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் லைவ்மின்ட் செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளதால், ஆவலை கிளறியுள்ளது.
இதுதொடர்பாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு, நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
டாடா ஆரியா காரின் வடிவமைப்பில் ஜேஎல்ஆர் எஞ்சினியர்கள் உதவி செய்தனர். ஆனால், இந்த 2 புதிய எஸ்யூவி வடிவமைப்பில் ஜேஎல்ஆர் பொறியாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








