2013 நானோ, புதிய இசிஎஸ்... பெரும் பட்டாளத்துடன் டாடா ரெடி!
ஒரே மூச்சில் 5 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களையும், 3 புதிய சிஎன்ஜி கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடல்கள் உடனடியாகவும், சிஎன்ஜி மாடல்கள் அடுத்த மாதம் முதலும் விற்பனைக்கு வருகின்றன.
டாடா நானோ, டாடா சுமோ கோல்டு, டாடா சஃபாரி ஸ்ட்ராம், இன்டிகோ இசிஎஸ், இன்டிகா ஆகிய 5 மேம்படுத்தப்பட்ட மாடல்கள் உடனடி விற்பனை லிஸ்டில் உள்ளன. நானோ, இசிஎஸ் செடான் மற்றும் இண்டிகா ஆகியவற்றின் சிஎன்ஜி மாடல்கள் புதிது. கூடுதல் அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் வரும் இந்த புதிய கார்கள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு ஸ்லைடருக்கு வந்துவிடுங்கள்.

2013 டாடா நானோ
ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, ட்வின் கிளவ் பாக்ஸ், புளூடூத் மற்றும் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை மேம்படுத்தப்பட்ட நானோவின் கூடுதல் அம்சங்கள். தவிரவும், புதிய வண்ணங்களிலும் கிடைக்கும். அடுத்த மாதம் முதல் இந்த புதிய நானோ விற்பனைக்கு வருகிறது.

சிஎன்ஜி நானோ
சிஎன்ஜியில் இயங்கும் நானோ கார் இ-மேக்ஸ்(E-MAX) என்று அழைக்கப்படும். இந்த கார் உலகின் குறைந்த கார்பனை வெளிப்படுத்தும் சிறப்புடன் வருகிறது. அதாவது, ஒரு கிலோமீட்டருக்கு 75 கிராம் கார்பனை மட்டும் வெளியிடும். நானோ இமேக்ஸ் காரின் முன் இருக்கைக்கு கீழே 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாடா இண்டிகோ இசிஎஸ்
வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்களை சந்தித்துள்ளது. புதிய இசிஎஸ் காரின் ஹெட்லைட்டுக்குள் கரும் பூச்சு, குரோம் கிரில் ஆகியவை புதிது. இந்த கார் F-Type கியர் பாக்ஸ் மற்றும் நவீன சஸ்பென்ஷன் செட்டிங் கொண்டதாக வந்துள்ளது.

மைலேஜை கவனிக்க...
புதிய இசிஎஸ் செடான் காரில் சிஆர்4 டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.

டாடா சுமோ கோல்டு
சுமோ கோல்டு எஸ்யூவியிலும் சிஆர்4 எஞ்சினுடன் வந்திருக்கிறது. இந்த எஸ்யூவி லிட்டருக்கு 15.3 கிமீ மைலேஜ் செல்லும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் ஏசி, புளூடூத்துடன் கூடிய புதிய மியூசிக் சிஸ்டம், புதிய டிக்கெல்ஸ் ஆகியவை புதியவை. அலாய் வீல்கள் டீலரில் பெற்றுக்கொள்ளலாம்.

டாடா இண்டிகா இவி2
குரோம் கிரில், புதிய ஹெட்லைட்டுகள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட ரியர் வியூ மிரர்கள், டூயல் டோன் இன்டிரியருடன் வந்திருக்கிறது. ஸ்மார்ட் ஷிப்ட் கியர் தொழில்நுட்பம் கொண்ட டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. பிஎஸ்-4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட இண்டிகா லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என டாடா தெரிவித்துள்ளது.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்
கூடுதல் அம்சங்களுடன் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்ப்ளோரர் என்ற ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டபுள் டின் டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், நட்ஜ் கார்டு, டோர் வைசர்கள், எக்ஸ்ப்ளோரர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டிக்கெல்களுடன் சாகச பயணங்களுக்கு ஏற்ற பேக்பேக் மற்றும் கூடாரம் அமைப்பதற்கான உபகரணங்களும் சில டீலர்களில் கிடைக்கும் என டாடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








