ரூ.5.93 லட்சத்தில் புதிய டாடா சுமோ கோல்டு எஸ்யூவி அறிமுகம்
கூடுதல் அம்சங்களுடன் புதிய டாடா சுமோ கோல்டு எஸ்யூவி இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய சுமோ கோல்டு ஜிஎக்ஸ், எஃப்எக்ஸ், இஎக்ஸ், எல்எக்ஸ் மற்றும் சிஎக்ஸ் என்ற 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.
இதுதவிர, பிளேஸிங் ரெட், டிவிலைட் கிரே, ஆர்டிக் சில்வர், போர்சலைன் ஒயிட் ஆகிய 4 புதிய வண்ணங்களிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய சுமோ கோல்டு எஸ்யூவியில் பவர்ஃபுல் டியூவல் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது. யுஎஸ்பி மற்றும் புளூடூத்தை சப்போர்ட் செய்யும் மியூசிக் சிஸ்டம் மற்றும் சொகுசான சஸ்பென்ஷன் அமைப்புடன் வந்துள்ளது.
புதிய சுமோ கோல்டு எஸ்யூவியில் 84 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் சிஆர்4 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
லிட்டருக்கு 15.3 கிமீம மைலேஜை புதிய சுமோ கோல்டு தரும் என டாடா மோட்டார்ஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ரூ.5.93 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








