கார்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டம்
தள்ளுபடியையும், சலுகையையும் கொடுத்து கார் விற்பனையை உயர்த்துவதற்கு முயன்று வரும் டாடா மோட்டார்ஸ், மறுபுறம் கார் விலையை விரைவில் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக இருப்பதால் பல நிறுவனங்கள் தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வாரி வழங்கி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையும் கடுமையாக சரிந்ததால், கடந்த ஏப்ரல் முதல் கார்களுக்கு தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகிறது.

விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எதிர்பார்த்த அளவு பலன் இல்லை. இந்த நிலையில், வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதை சரிகட்டும் விதமாக அனைத்து கார்களின் விலையையும் உயர்த்த டாடா முடிவு செய்துள்ளது.
பண்டிகை காலத்துக்கு முன்னதாக டாடா கார்களின் விலை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, நானோ சிஎன்ஜி உள்ளிட்ட பல புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications







