பெங்களூரில் ஹைடெக் வசதிகளுடன் புதிய கார் ஷோரூம் திறந்த டாடா
பெங்களூரில் ஹைடெக் வசதிகளுடன் கூடிய புதிய கார் ஷோரூமை டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது.
வாடிக்கையாளர் சேவையில் புதிய அத்தியாயத்தை எட்டுவதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. ஹரிஸான் நெக்ஸ்ட் என்ற விற்பனை கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய சேவைகளை டாடா வழங்க உள்ளது.

இதில் முதலாவதாக பெங்களூரில் நவீன சாதனங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய புதிய ஹைடெக் கார் ஷோரூமை டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது.
இந்த புதிய ஷோரூம் 11,000 சதுர அடி பரப்பளவில் புதிய ஷோரூம் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 4,000 சதுர அடி பரப்பில் ஷோரூம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
வைஃபை இன்டர்நெட் தொடர்பு வசதி, சுவர்களில் பெரிய திரைகள், சொகுசான வாடிக்கையாளர் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கஃபே கார்னரும் உள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் விதத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, நாடு முழுவதும் 30 புதிய ஹைடெக் ஷோரூம்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications