டாடா மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா கார்களுக்கு மட்டுமே அனுமதி!

By Saravana
Tata Nano
டாடா மோட்டார்ஸ் வளாகத்தில் இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் இனி டாடா கார்களை மட்டுமே நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேறு பிராண்டு கார்களை வைத்திருக்கும் ஊழியர்கள் இனி உள்ளே தங்களது காரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில கார் நிறுவனங்கள் ஏற்கனவே இந்த நடைமுறையை வழக்கத்தில் வைத்துள்ளன. ஹூண்டாய் கூட இதேபோன்ற விதிமுறையை பின்பற்றுகிறது. மேலும், தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் ஹூண்டாய் பிராண்டு கார்களை வாங்க வேண்டும் என்ற முறையை பின்பற்றி வருகிறது. ஹோண்டா டூ வீலர்ஸ், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ் இணைந்துகொண்டுள்ளது. தங்களது பிராண்டின் மதிப்பை வெளி உலகுக்கு உணர்த்தும் விதத்தில் இவ்வாறு விதிமுறை அமல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பிற பிராண்டுகளின் கார்கள் டாடா மோட்டார்ஸ் வளாகத்துக்கு வெளியே இருக்கும் பார்க்கிங் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இதுபோன்ற விதிமுறையை அமலில் வைத்திருக்கும் நிலையில், ஹோண்டா கார்ஸ், ஃபோர்டு மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் இந்த விதிமுறையை பின்பற்ற வில்லை. தங்களது பணியாளர்கள் எந்த பிராண்டு கார்களில் வந்தாலும் அதனை பற்றி கண்டுகொள்வதில்லை.

இருப்பினும், தங்களது நிறுவனத் தயாரிப்பை வாங்கும் பணியாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களையும், விலையில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The latest automaker to put in place such a rule is Tata motors, which now has decided to make life difficult for employees using a different branded vehicle. Parking areas in Tata Motors' premises are henceforth open only to its own branded vehicles. Those driving to work in cars of different make will now either have to find an alternate parking area or switch to a Tata vehicle.
Story first published: Tuesday, June 18, 2013, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X