கார்களுக்கு டாடா வழங்கும் சலுகைககள் விபரம்
கார் விற்பனை தொடர்ந்து மந்தமாக இருந்து வருகிறது. விற்பனையை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு போதிய பலன் கிடைக்கவில்லை என்பது கடந்த மாத விற்பனை பட்டியலை பார்த்தாலே தெரிகிறது.
இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில், சிறப்பு சலுகை திட்டங்களை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. நானோ முதல் ஆரியா வரை அனைத்து கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.
"Win 4 Sure" என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகை திட்டத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐபேட் மினி, ஸ்மார்ட்போன் மற்றும் டாடாவின் புதிய காரை வெல்லும் வாய்ப்பை பெற முடியும்.

பரிசு பொருட்கள்
Win 4 Sure என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகை திட்டத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐபேட் மினி, ஸ்மார்ட்போன் மற்றும் டாடாவின் புதிய காரை வெல்லும் வாய்ப்பை பெற முடியும்.

டாடா நானோ
நானோ காருக்கு அதிகபட்சமாக ரூ.45,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

டாடா இன்டிகா இவி2
நானோ போன்றே இண்டிகா இவி2 காருக்கும் ரூ.45,000 வரையிலான சிறப்பு சலுகைகளை பெற முடியும்.

டாடா இண்டிகா விஸ்டா
விஸ்டா பிரிமியம் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.53,000 மதிப்புடைய சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

டாடா இண்டிகோ இசிஎஸ்
டாடா இண்டிகோ இசிஎஸ் காருக்கு ரூ.48,000 வரையிலான சிறப்பு சலுகைகளை பெறலாம்.

டாடா சுமோ கோல்டு
சுமோ கோல்டு காருக்கு ரூ.43,500 மதிப்பிலான சிறப்பு தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்
ரூ.25,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்

டாடா ஆரியா
இருப்பதிலேயே ஆரியா காருக்குத்தான் அதிகப்படியான தள்ளுபடியை டாடா வழங்குகிறது. ரூ.1.42 லட்சம் வரை மதிப்புடைய தள்ளுபடி சலுகைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








