சிஎன்ஜியில் இயங்கும் நானோ அறிமுகம்: கிமீ.,க்கு ரூ.1.32 மட்டுமே செலவு
சிஎன்ஜியில் இயங்கும் நானோ கார் விற்பனைக்கு ஆமதாபாத்தில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நானோ இமேக்ஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய நானோ வேரியண்ட் புறத்தோற்றத்திலும், உட்புறத்திலும் பல்வேறு மாறுதல்களுடன் வந்துள்ளது.
சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் உள்ள நகரங்களில் இந்த நானோ காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. சிஎன்ஜி நானோ காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிஎன்ஜி சிலிண்டர்
டிரைவர் இருக்கைக்கு கீழே 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் இருக்கிறது. இதனால், காரின் எடையும் 100 கிலோ வரை அதிகரித்துவிட்டது.

சிஎன்ஜியில் பயண தூரம்
ஒருமுறை இயற்கை எரிவாயு முழுவதுமாக நிரப்பினால் 375 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது டாடா மோட்டார்ஸ்.

செலவு
சிஎன்ஜியில் செல்லும்போது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.32 மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
624 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோலில் செல்லும்போது அதிகபட்சமாக 37.5 பிஎச்பி ஆற்றலையும், சிஎன்ஜியில் ஓடும்போது அதிகபட்சமாக 32 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
நானோ இமேக்ஸ் இன்டிரியரில் புதிய வண்ண கலவையுடன் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. பெரிய ஸ்டீயரிங் வீல், கூடுதல் உயரம் கொண்ட இருக்கைகள் என சிறப்பாக இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு
சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் சிஎன்ஜி செல்லும் பாதைகளில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக கண்டறிந்து எச்சரிக்கும் சிறப்பு பாதுகாப்பு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாரண்டி
சிஎன்ஜி நானோ கார் 4 ஆண்டுகள் அல்லது 60,000 கிலோமீட்டருக்கான வாரண்டியுடன் கிடைக்கும்.

விலை
சிஎன்ஜியில் இயங்கும் நானோ காரின் சிஎக்ஸ் வேரியண்ட் ரூ.2.45 லட்சத்திலும், எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.2.72 லட்சத்திலும் ஆமதாபாத் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








