இறுதிக்கட்ட சோதனையில் சிஎன்ஜி நானோ: விரைவில் அறிமுகம்
விற்பனை சரிவை தடுக்கும் விதத்தில், பல புதிய எரிபொருள் கொண்ட நானோ கார் மாடல்களை களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் 2013 மாடல் கார்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. அதில், இ-மேக்ஸ் என்ற பெயரில் சிஎன்ஜியில் இயங்கும் கார்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்தது.
மேலும், அந்த நிகழ்ச்சியில் சிஎன்ஜி நானோவும் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், புனே அருகே சிஎன்ஜி நானோ கார் இறுதிக்கட்ட சாலை சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் மார்க்கெட்டுக்கு வருவது உறுதியாகியுள்ளது. பெட்ரோல் நானோவை விட சிஎன்ஜி நானோவை எளிதில் கண்டறியும் வகையிலான சில மாற்றங்களை டாடா செய்துள்ளது.

சோதனை ஓட்ட படம்
புனே அருகே சோதனை செய்யப்பட்ட நானோ காரின் படம். புதிய பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர், ஸ்பீடோமீட்டரில் பசுமை காராக குறிக்கும் விதத்தில் பச்சை வண்ண வளைய கோடுகள் ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பின்புற பம்பருக்கு மேல் காற்று செல்வதற்கு வசதியாக கூடுதல் கிரில் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி சிலிண்டர்
இந்த காரில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும்.

சிஎன்ஜி சுவிட்ச்
சிஎன்ஜி மற்றும் பெட்ரோலுக்கு எளிதாக மாற்றிக் கொள்வதற்காக பிரத்யேக சுவிட்ச் பொருத்தப்பட்டிருக்கும்.

மைலேஜ்
அராய் சான்றுபடி சிஎன்ஜியில் இயங்கும் நானோ கார் லிட்டருக்கு 36 கிமீ மைலேஜ் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் புகை குறைவு
ஒரு கிலோமீட்டருக்கு 75 கிராம் கார்பனை மட்டுமே வெளியிடும் என்பதால், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த காராகவும் மாறும்.

வாரண்டி
4 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ.,க்கான வாரண்டியுடன் வருகிறது.
spy image source: Anything on Wheels


Click it and Unblock the Notifications








