நானோ காருக்கு 4 வித பாடி கிட்டுகள் அறிமுகம்!
இளைய சமுதாயத்தை கவரும் விதமாக நானோ காரை கொஞ்சம் ஸ்டைலாக மாற்றும் விதத்தில் 4 விதமான பாடி கிட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது வெளிப்புறத் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும்.
எல்எக்ஸ் மற்றும் சிஎக்ஸ் வேரியண்ட்களுடன் இந்த பாடி கிட் கிடைக்கும். ஜெட், ரீமிக்ஸ், ஆல்ஃபா மற்றும் பீச் ஆகிய 4 விதமான மாடல்களில் இந்த புதிய பாடி கிட்டுகள் கிடைக்கும். இன்டிரியர் மற்றும் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது. பாடி கிட்டுடன் காரின் முன்பக்கத்துக்கு பிரத்யேக பேட்ஜ் ஒன்றும் பொறிக்கப்பட்டு இருக்கும். 2012 மாடல் நானோ காருக்கும் இந்த பாடி கிட்டுகள் பொருந்தும்.

சிறப்பம்சங்கள்
சில்வர் பினிஷ் கொண்ட வி ஸ்போக் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட், டீக்கெல்கள் மற்றும் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவை கூடுதலாக இருக்கும். ஏர் ஃப்ளோ வென்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.

பாடி கிட் விலை
2013 எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.27,000ம், 2012 எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.28,500ம் கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 2013 சிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.15,000ம், 2012 மாடல் சிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.16,500ம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications








