டாப்10 விற்பனை வரிசையில் நானோவுக்கும் இடம்!

பல்வேறு காரணங்களால் நானோ கார் விற்பனையில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை. நானோ காரின் விற்பனையை உயர்த்த பல்வேறு முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் எடுத்து வருகிறது.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றுள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒரு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கார் விற்பனையில் டாப் 10 பட்டியலில் நானோ காருக்கும் இடம் கிடைத்துள்ளது.
ஆல்ட்டோ, ஐ10 உள்ளிட்ட அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் வரிசையில் நானோவும் இணைந்துள்ளது.
மேலும், பெட்ரோல் கார் விற்பனை மந்தமடைந்து வரும் நிலையில், டாடாவின் மொத்த கார் விற்பனை 18 விழுக்காடு அதிகரித்துள்ளதும் அந்த நிறுவனத்துக்கு சிறிது உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








