இந்த ஆண்டில் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்த நானோ

இந்த ஆண்டில் அதிகபட்ச விற்பனையை கடந்த மாதம் பதிவு செய்துள்ளது டாடா நானோ கார். ஜூலையில் மொத்தம் 2,052 நானோ கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக படு பதாளத்தில் இருந்து சற்று மீண்டுள்ளது நானோ கார் விற்பனை. கடந்த ஜூன் முதல் நானோவின் விற்பனை சிறிது சிறிதாக உயரத் துவங்கியிருக்கிறது.

Tata Nano

இது டாடாவிற்கு நம்பிக்கையை சற்று அதிகப்படுத்தியிருக்கிறது. ஆனால், மாதத்திற்கு சராசரியாக 12,000 கார்கள் விற்பனை என்ற இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட நானோ இன்னமும் மிக சொற்ப அளவில் விற்பனையாகி வருவது டாடாவுக்கு தொடர்ந்து கவலைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், கூடுதல் வசதிகள், மேம்படுத்தப்பட்ட இன்டிரியர், வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களுடன் கூடிய நானோ காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவனத்தை ஈர்க்கும் என்று டாடா நம்பிக்கை வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2013, 9:27 [IST]
English summary
Tata Nano sales for the month of July 2013 stand at 2052 units, which is it’s highest monthly sales figure reported for current year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+