பவர் ஸ்டீயரிங்குடன் வரும் டாடா நானோ கார்!
டாடா நானோ காரில் பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலிவு விலை கார் என்ற நானோ கார் மீது விழுந்துள்ள முத்திரையை போக்குவதற்கு டாடா மோட்டார்ஸ் பல்வேறு நடவடக்கைகளை எடுத்து வருகிறது.
மலிவு விலை கார் என்று நானோவை பிரசங்கம் செய்தது தவறு என்று ரத்தன் டாடாவே சமீபத்தில் ஒப்புதல் தெரிவித்தார். இந்த நிலையில், நானோ காரின் மலிவு விலை முத்திரையை போக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை டாடா எடுத்து வருகிறது. அதில், ஒன்றாக பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ காரை விரைவில் டாடா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரச்னை
30 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்போது பவர் ஸ்டீயரிங் பெரிய பிரச்னையாக இருக்காது. இருந்தாலும், நகர்ப்புறத்தில் மெதுவாக காரில் செல்லும்போது பவர் ஸ்டீயரிங் இல்லாதது கைகளுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது.

பவர் ஸ்டீயரிங்
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜனவரி முதல் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ கார் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிகிறது.

வேரியண்ட்
எந்தெந்த வேரியண்ட் பவர் ஸ்டீயரிங்குடன் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

விலையில் மாற்றம்
பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட மாடல் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கூடுதல் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்னை ஓவரா?
பவர் ஸ்டீயரிங் உள்ளிட்ட வசதிகளுடன் வந்தாலும், நானோ காரின் விற்பனையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இருப்பினும், நானோ கார் மீண்டும் விற்பனையில் மிக முக்கிய இடத்தை பெறும் என்று ரத்தன் டாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மத்தியில் டீசல் நானோ கார் விற்பனைக்கு வந்தபின் நானோ காரின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








