நானோ ஸ்மார்ட் சிட்டி காராக நிலைநிறுத்தப்படும்: சைரஸ் மிஸ்திரி
நானோ காரை ஓர் சிறந்த நகர்ப்புற காராக நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஆண்டு பங்குதாரர் கூட்டத்தில் முதல்முறையாக உரை நிகழ்த்திய சைரஸ் மிஸ்திரி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அறிவித்தார்.

அப்போது, நானோ காரின் விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய வியூகங்களை பங்குதாரர்களிடம் பகிர்ந்து கொண்டார். இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான அம்சங்களுடன் நானோவை ஸ்மார்ட் சிட்டி காராக நிலை நிறுத்த இருப்பதாக அவர் கூறினார்.
பவர் ஸ்டீயரிங், கூடுதல் மாற்றங்களுடன் வெளிப்புறம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் உள்ளிவற்றுடன் நானோவை சிறந்த நகர்ப்புற காராக மாற்றி நிலைநிறுத்தப் போவதாக அவர் கூறினார்.
தாமதமாகி வரும் சிஎன்ஜி நானோ இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டு பயணித்து வருவதாகவும், அதேசமயம், வளர்ச்சிப் பாதைக்கு செல்வதற்கு கையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.


Click it and Unblock the Notifications








