ஜனவரி 15ல் பவர் ஸ்டீயரிங்குடன் டாடா நானோ ரிலீஸ்!!
அடுத்த மாதம் 15ந் தேதி பவர் ஸ்டீயரிங் கொண்ட டாடா நானோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நானோ ட்விஸ்ட் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.
டாடா நானோ காருக்கான எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டத்தை ஜெர்மனியை சேர்ந்த இசட்எஃப் நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது.

பவர் ஸ்டீயரிங் அமைப்பு கொண்ட நானோ கார் எக்ஸ்இ, எக்ஸ்டி ஆகிய இரு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த வேரியண்ட்டுகளிலும், பவர் ஸ்டீயரிங் இல்லாத சிஎக்ஸ், எல்எக்ஸ் வேரியண்ட்டுகளில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
டாடா நானோ ட்விஸ்ட் என்ற பெயரில் புதிய பவர் ஸ்டீயரிங் கொண்ட மாடல் கிடைக்கும். மேலும், ட்விஸ்ட் மாடல் ஊதா நிறத்தில் வருமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
பவர் ஸ்டீயரிங் நானோ மாடல் விலை ரூ.15,000 வரை கூடுதலாக இருக்கும். பவர் ஸ்டீயரிங் இல்லாத நானோ கார் வேரியண்டுகளும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








