ஆரியாவுக்கு ரூ.2.5 லட்சம் தள்ளுபடி: விபரம்
ஆரியா எம்பிவி காருக்கு டாடா மோட்டார்ஸ் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இருப்பில் தேங்கிக் கிடக்கும் ஓல்டு ஸ்டாக் கார்களை தள்ளிவிடுவதற்காக இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கார் விற்பனை சரிவு கண்டிருப்பதால் அனைத்து நிறுவனங்களுமே சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது டாடா தனது கார்களுக்கு தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால், ஆரியாவுக்கு ஒருபடி மேலே போய் ரூ.2.5 லட்சம் சலுகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. டாடா இந்த அதிகபட்ச சலுகையை வழங்குவதற்கான காரணத்தையும், தள்ளுபடி விபரத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

ஒற்றை இலக்க விற்பனை
ஆரியாவின் விற்பனை ஒற்றை இலக்கத்தை தொட்டுவிட்டதோடு, டீலரிலும், ஸ்டாக் யார்டிலும் இருப்பில் ஆரியா கார்கள் தங்கியுள்ளன. இதில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருக்கும் கார்களும் உண்டு.

ஆரியா விற்பனை
கடந்த மூன்று மாதங்களாக ஆரியா விற்பனை கணக்கை எடுத்து பார்த்தால் தலையில் அடித்துக் கொள்ளதாக குறைதான் டாடாவுக்கு. டிசம்பரில் 5 ஆரியா கார்களும், ஜனவரியில் 52 ஆரியா கார்களும், கடந்த மாதம் வெறும் 4 ஆரியா கார்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

உச்சத்தில் போட்டியாளர்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த மாதம் வரையில் 574 ஆரியா கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 23919 எக்ஸ்யூவி 500 கார்களையும், டொயோட்டா நிறுவனம் 35446 இன்னோவா கார்களையும் விற்பனை செய்துள்ளது.

தள்ளுபடி விபரம்
கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட ஆரியா கார்களுக்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.

2011 மாடலுக்கு தள்ளுபடி
2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் இருக்கும் ஆரியா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2.5 லட்சம் தள்ளுபடி பெறலாம்.

எக்ஸ்சேஞ்ச் போனஸ்
காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனசாக பெறலாம்.

பேஸ் வேரியண்ட்டுக்கு சலுகை
எல்எக்ஸ் பேஸ் வேரியண்ட்டுக்கு ரூ.50,000 மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.

2013 மாடலுக்கான சலுகை
இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடலாக இருந்தால் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

டெலிவிரி
முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இருப்பை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்குள் ஆரியா டெலிவிரி வழங்கப்படுகிறது. ரூ.9.9 லட்சம் ஆரம்ப விலை முதல் ஆரியா விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








