இந்தோனேஷியாவில் ஆட்டோமேட்டிக் நானோவை அறிமுகப்படுத்த டாடா திட்டம்
அடுத்த ஆண்டு இந்தோனேஷியாவில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷிய மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முறைப்படி காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக அந்த மார்க்கெட்டை அலசி ஆராய்ந்து பார்த்துவிட்ட டாடா முதலாவதாக ஆரியா, சஃபாரி, விஸ்டா கார்களை ஆகிய மூன்று கார் மாடல்களை அங்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், அந்த மார்க்கெட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட நானோ காரை அறிமுகப்படுத்தவும் டாடா திட்டமிட்டுள்ளது. இந்தோனேஷிய வாடிக்கையாளர்கள் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். எனவே, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட நானோவை அங்கு விற்பனைக்கு விடுவதற்கு டாடா திட்டமிட்டுள்ளதாம்.
இந்தோனேஷியாவில் 5 டீலர்ஷிப்புகளுடன் களமிறங்கியிருக்கும் டாடா மோட்டார்ஸ் விரைவில் டீலர்ஷிப் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் தீவிரம் காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர, 6 புதிய மாடல்களையும் அங்கு அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








